கிணத்துக்கடவு ஆர்.எஸ் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு ஆர்.எஸ் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ் சாலையில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசம் கடந்த 19ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆர்.எஸ். ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே முட்புதரில் மதுபாட்டில்களை வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு ஒரு நபர் மது விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நபரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் ஆர்.எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.