மேலும் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவை: பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில்வே மேலாளரிடம் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - போத்தனூர் இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மின்சார ரயில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, கிணத்துக்கடவு ரயில்நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்த சேலம் மற்றும் பாலக்காடு கோட்ட மேலாளரிடம் திமுக சார்பில் முன்னாள் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவரும், மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினருமான கதிர்வேல் தலைமையில் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி - போத்தனூர் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்தது அடுத்து கிணத்துக்கடவு வழியாக ஏற்கனவே இயக்கிக் கொண்டிருந்த கோவை - ராமேஸ்வரம், கோவை - செங்கோட்டை, கோவை -தூத்துக்குடி, கோவை - திண்டுக்கல் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், மேலும் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் போது திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், அண்ணநகர் ஈஸ்வரன், கிணவை கணேஷ், தினேஷ்குமார், லட்சுமணன், மணிகண்டன், ரமேஷ்குமார், முரளி, காளிமுத்து மற்றும் வியாபார சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.