கடந்த 30-ஆண்டு காலமாக நடந்த பத்திரிக்கை நிகழ்வுகளை கார்ட்டூன்கள் மூலம் அறியலாம். இதில் பல பத்திரிக்கைகளில் வெளியான பல்லாயிரக்கணக்கான கார்ட்டூன்களின் தொகுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் தலைமுறைக்கான ஒரு டிஜிட்டல் நூலகம்.
கோவை: கோவை ரேஸ் கோர்சில் உள்ள சக்தி சுகர்சில் (www.mathicartoons.com) இணையதளம் துவக்க விழா நடைபெற்றது.
கோவை ரேஸ் கோர்சில் உள்ள சக்தி சுகர்சில் (www.mathicartoons.com) இணையதளம் துவக்க விழா நடைபெற்றது. கார்ட்டூனிஸ்ட் மதி ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பத்திரிகைத் துறைக்கு அறிமுகமாகி தற்போது டிஜிட்டல் ஊடகத்திலும் தடம் பதிக்கிறார்.
1990-ஆம் ஆண்டு முதல் இவர் வரைந்த சுமார் 17,000 கார்ட்டூன்களிலிருந்து 2000 கார்ட்டூன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் இடம்பெற உள்ளது. மேலும், நியூஸ் டுடே, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்தார் கார்ட்டூன்கள் இதில் இடம்பெறவுள்ளன.
இந்த இணையதளம் வாயிலாக, தமிழ் பத்திரிக்கை உலகம் எப்படி இருக்கிறது. மேலும் பெரும் ஜாம்பவான்களான சோ ராமச்சந்திர ஆதித்தன், சாவி போன்றவர்கள் அவற்றை எப்படி அணுகினார்கள் என்பதையும் இந்த இணையதளத்தில் வெளியாகும் கார்ட்டூனின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் சமூகத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் தமிழ் பத்திரிக்கை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை கார்ட்டூனில் கூறியிருக்கிறாராம்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 30-ஆண்டு கால அரசியல் வரலாற்றை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம் கார்ட்டூனை வடிவமைத்து அதனை வெளியிட உள்ளாராம், இதனை பொலிட்டிக்கல் என்சைக்ளோபீடியா என்றும் கூறலாம் என்கின்றனர்.
மேலும் இதில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த, சமூகப் பிரச்சினைகள், அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் என்னென்ன வென்று பாடமாகவே படிக்கும் வண்ணம் அமைத்துள்ளனர்.
இணையதளம் மூலம் இக்கால தலைமுறைகள் கடந்த 30 ஆண்டு காலமாக நடந்த பத்திரிக்கை நிகழ்வுகளை கார்ட்டூன்கள் மூலம் அறிந்து கொள்ளலாமாம்.
இதில் பல பத்திரிக்கைகளில் வெளியான பல்லாயிரக்கணக்கான கார்ட்டூன்களின் தொகுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் தலைமுறைக்கான ஒரு டிஜிட்டல் நூலகம் என்றே கூறலாம்.