கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.!!

கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இந்தியத் தொழில் வர்த்தக சபை ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இந்தியத் தொழில் வர்த்தக சபை ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவை கிளையின், 87-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அவினாசி ரோடு சேம்பர் டவர்ஸ் வளாகத்தில் இன்று நடந்தது. இந்தியத் தொழில் வர்த்தக சபை, கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், வடகோவை, பீளமேடு, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் நவீன வசதிகளுடன், கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பீளமேடு, இருகூர், சோமனுார் ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் விரிவுபடுத்த வேண்டும்.



நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும். தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலமாகக் கோவை மாறினால், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்கி மையம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும். இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்குகளுக்கு, ‘ஜீரோ’ சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். தொழில் துறையினரின் குறைகளுக்குத் தீர்வுகாண, மண்டல அளவில் தொடர் சந்திப்பு கூட்டங்களை அரசு நடத்த வேண்டும்.



நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒற்றைச் சாளர முறையில் கட்டுமான அங்கீகாரம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைச் செயல்படுத்தினால் பசுமை ஆற்றல் ஊக்குவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஸ்ரீராமுலு, சுந்தரம், செயலாளர்கள் துரைராஜ், நடராஜன், பொருளாளர் கைலாஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...