கோவையில் கொசுக்களால் பரவும் நோய் குறித்து விழிப்புணர்வு.. உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும்-ராஜ கோபால்‌ சுன்கரா வேண்டுகோள்‌.!

கொசுவினால்‌ பரவும்‌ நோய்கள்‌ குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட, கொசு உற்பத்தியாகாமல்‌ தவிர்த்திட உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும்‌ எனவும், வீட்டில்‌ உள்ள கழிப்பறையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்‌.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்‌ முன் களப்பணியாளர்கள்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வழங்கினார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ உடையாம்பாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்‌ முன்களப்பணியாளா்களிடம்‌ ஆணையாளர்‌‌ தெரிவிக்கையில்‌,

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்‌ களப்பணியாளாகிய நீங்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல்‌, இருமல்‌, உள்ளதைக் கண்டறிந்து கோவிட்‌-19 பதிவேடுகளில்‌ பதிவு செய்வதன்‌ மூலம்‌ தொற்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.

பரிசோதனை மேற்கொள்ளும்போது வீட்டில்‌ உள்ள அனைவருக்கும்‌ பரிசோதனை செய்திட வேண்டும்‌. இத்தகைய பணிகளை மிகச்சிறப்பாகச் செய்வதன்‌ மூலம்‌ தொற்று பாதித்தவர்களை உடனடியாக கண்டறிய முடிகிறது. மேலும்‌ இப்பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்‌. தடுப்பூசி செலுத்தாதவர்கள்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என தெரிவித்த ஆணையாளர்‌‌ பின்னர்‌,

கொசுவினால்‌ பரவும்‌ டெங்கு போன்ற நோய்கள்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வினை ஏற்படுத்திட, கொசு உற்பத்தியாகாமல்‌ தவிர்த்திட வீட்டில்‌ உள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும்‌.

வீட்டில்‌ உள்ள தண்ணா்‌ தொட்டிகளைக் கொசுக்கள்‌ மற்றும்‌ கொசுப்புழு புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌. வீட்டில்‌ உள்ள கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ செந்தில்குமார்‌ இரத்தினம்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...