கொசுவினால் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட, கொசு உற்பத்தியாகாமல் தவிர்த்திட உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும் எனவும், வீட்டில் உள்ள கழிப்பறையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்கள் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளா்களிடம் ஆணையாளர் தெரிவிக்கையில்,
கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன் களப்பணியாளாகிய நீங்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல், இருமல், உள்ளதைக் கண்டறிந்து கோவிட்-19 பதிவேடுகளில் பதிவு செய்வதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.
பரிசோதனை மேற்கொள்ளும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்திட வேண்டும். இத்தகைய பணிகளை மிகச்சிறப்பாகச் செய்வதன் மூலம் தொற்று பாதித்தவர்களை உடனடியாக கண்டறிய முடிகிறது. மேலும் இப்பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்த ஆணையாளர் பின்னர்,
கொசுவினால் பரவும் டெங்கு போன்ற நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட, கொசு உற்பத்தியாகாமல் தவிர்த்திட வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும்.
வீட்டில் உள்ள தண்ணா் தொட்டிகளைக் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டில் உள்ள கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், செயற்பொறியாளர் ஞானவேல், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.