இரயில்வே, வங்கி, இன்சுரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்கும் மத்திய அரசைக்கண்டித்து இன்று வால்பாறையில் திமுகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுக்குறித்து எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும், தொடர்ச்சியாக மக்கள் விரோதக்கொள்கையைத் தான் பாஜக அரசு மேற்கொண்டுவருகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் அரசைக்கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, இன்று வால்பாறை பாரதீய ஜனதா அரசைக்கண்டித்து திமுகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆனைமலை திராவிடத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன்,நகரக் கழக துணைச் செயலாளர் k.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரமசிவம் எல்பி எஃப் தொழிற்சங்க செயலாளர் சரவண பாண்டியன் ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மீசை குமார், LR.பிரகாஷ் ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் அண்ணாநகர் தமிழ்ச்செல்வன் ,நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நித்திய குமார், சூரியா, சுமைத் தூக்கும் தொழிற்சங்க தலைவர் அம்மாசி,மற்றும் இளைஞர் அணியினர் கழகத் தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.