மத்திய அரசின் மக்கள் விரோதக்கொள்கையைக்கண்டிக்கும் விதமாக உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள கணக்கம்பாளையத்தில் திமுக தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மத்தியில் பாஜக அரசு பதவி வகித்த நாள் முதல் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டுவருகிறது.
குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது போன்ற மக்கள் விரோதக் கொள்கைகளைத்தான் கடைப்பிடித்துவருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள கணக்கம்பாளையத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கணக்கம்பாளையம் திமுக ஒன்றியசெயலாளர் எஸ்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வி.செளந்தரராஜன், திமுகவைச் சேர்ந்த இரா.லோகநாதன். நாகராஜன், ஊராட்சி துணை தலைவர் பாஸ்கர் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ரணதேவ், மார்க்ஸிஸ்ட் கட்சி செயலாளர். திருமலைசாமி,மதிமுக செயலாளர். வைரவேல், காங்கிரஸ் கட்சியின் நகரதலைவர் கோ.ரவி. மற்றும் உடுமலை நகரில் முன்னாள் நகரமன்ற தலைவர் வேலுசாமி தலைமையிலும் மடத்துக்குளம் துங்காவி பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.