கோவையில் நில ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக அதிமுக நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்..!

பட்டா வாங்கிய பயனாளிகள் வீடு கட்ட இடையூறு செய்து, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


கோவை: நில ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக அதிமுக நிர்வாகி மீது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.



அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், எங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து எங்கள் பகுதியில் வசிக்கும் அதிமுக வார்டு செயலாளர் மருதாசலம் என்பவர் பட்டா வாங்கிய பயனாளிகள் வீடு கட்ட இடையூறு செய்து, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...