கோவையில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 570 இறப்பு வழக்குகள் பதிவு - கோவை மாநகர காவல் துறை தகவல்..!

தினமும் சராசரியாக 6 பேர் தற்கொலை செய்து கொள்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், 570 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் விபத்தில் பலியானவர்கள் மட்டும், 63 பேர் என தெரியவந்துள்ளது.

கோவை மாநகர், மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்கொலை, இயற்கைக்கு மாறான மரணங்கள், விபத்துகளை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படும் நபர்களுக்கு ஆலோசனை வழங்க, 'விடியல்' எனும் மையமும் துவங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநகர் காவல் நிலையங்களில் இந்தாண்டு 570 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.

தினமும், சராசரியாக ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள கவுன்சிலிங் மையம் மூலம் தற்கொலைகளை குறைக்க முடியும் என போலீசார் நம்புகின்றனர்.

கோவை மாநகரில், விபத்து வழக்குகளும் அதிகரித்துள்ளன. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், வாகனப் போக்குவரத்து குறைந்திருந்ததால், விபத்து உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், விபத்து உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்தாண்டு இதுவரை, 63 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இதையடுத்து, போக்குவரத்து விதிகளை தீவிரமாக அமல்படுத்த போலீசார் களமிறங்கியுள்ளனர்.

இதுதவிர, கோவை மாநகர காவல் நிலையங்களில் ஏழு கொலை, 31 கொலை முயற்சி, 51 வழிப்பறி, 96 கொள்ளை மற்றும் 294 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...