கோவையில் மாபெரும் தூய்மை பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்..!!

இந்த தூய்மை பணியானது இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 1500 கி.மீ சுற்றளவுக்கு இந்த பணியானது மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாபெரும் தூய்மை பணி முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

தமிழக முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையிலும் மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

அதில் கோவையில் 50 கி.மீ சுற்றளவுக்கு மாநகராட்சியின் 81வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் சுங்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இந்த தூய்மை பணியானது இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 1500 கி.மீ சுற்றளவுக்கு இந்த பணியானது மேற்கொள்ளப்படும். இந்த பணியில் 1500 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்;

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாபெரும் தூய்மைப் பணியாளர் முகாம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் முகாமின் நோக்கம் என்னவென்றால் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி மற்றும் மழைநீர் வடிகால் அமைத்து எளிதாக தண்ணீர் வெளியேறுவதற்கு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...