மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: கோவையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை அருகே காலம் துறையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (37). இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து முன்டந்துறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மனைவி தமிழரசி (30) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
இதனிடையே, முன்டந்துறை பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே அதி வேகத்தில் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இது குறித்து, காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.