கோவையில் ரயில்வே இன்ஜினியரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 59 சவரன் நகை மீட்பு..!

கொள்ளையடிக்கப்பட்ட 59 பவுன் நகை மற்றும் 4.2 கிலோ வெள்ளி பொருட்களை பத்திரமாக மீட்ட போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே இன்ஜினியரின் வீட்டை உடைத்து 59 சவரன் நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே இடையார்பாளையத்தில் வசிப்பவர் கோபால் ராஜு (56). இவர் ரயில்வே என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், இவருடைய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 59 பவுன் நகை 4.2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், கோவை அத்தி பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணபுரத்தில் வசிக்கும் கண்ணன் (42) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து 59 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...