தென்னமநல்லூர் - பூலுவபட்டி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற போது கணவனின் கண் முன்னே நீரில் மூழ்கி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை தென்னமநல்லூர் - பூலுவபட்டி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற போது கணவனின் கண் முன்னே நீரில் மூழ்கி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை, ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (28). இவர் ஒரு ஒர்க் ஷாப் ஊழியர். இவருக்கும், சரஸ்வதி (20) என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று ராஜேஷ் தனது மனைவி சரஸ்வதி உடன் தென்னமநல்லூர் - பூலுவபட்டி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது சரஸ்வதி நீரில் மூழ்கினார். ராஜேஷ், மனைவியை மீட்க முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர், சரஸ்வதியை தீயணைப்பு துறையினர் மீட்டு, பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.