ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.!!

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.


பொள்ளாச்சி: ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் அருவியை மூடினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் அருவி திறக்கப்பட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து வந்த வகித்தனர்.

இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சக்திஎஸ்டேட், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடனே அங்குக் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாறைகள், மரக்கிளைகள் அடித்து வரப்படும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் அருவியை மூடினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...