வால்பாறையில் 30-இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்.!!

காலை 7-மணி முதல் மாலை 7-மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அனைத்து முகாம்களில் பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்கின்றனர்.


கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி முகாம் 30-இடங்களில் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை 62-எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு சுமார் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தமிழக அரசு அறிவுறுத்தலின்படி18-வயதுக்கும் மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்தது.

இதை பின்பற்றி அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டு கொரோனா தொற்று பரவாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். கட்டாயம் முக கவசம் தனி நபர் இடைவெளி அதிகமாக பொது இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளைக் கடைப்பிடித்துப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் செய்து உள்ளது.

இதைப் பின்பற்றி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பின்படி வால்பாறையில் சிறப்புத் தடுப்பு ஊசி முகாம் 30-இடங்களில் அமைக்கப்பட்டு இன்று 19.9.21 ஞாயிறு கிழமை என்பதால் தேயிலைத் தோட்டம் மக்களுக்கு விடுமுறை என்பதாலும் என்று தடுப்பு ஊசி முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

வால்பாறையில், இது வரை 40-ஆயிரத்துக்கும் மேல் தடுப்பு ஊசி சுகாதாரத் துறை மூலமாகப் போடப்பட்டு உள்ளது. இன்று 30-இடங்களில் தடுப்பு ஊசி முகாம் அமைக்கப்பட்டு 18-வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கட்டாயம் தடுப்பு ஊசி போடப்படு வருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை ஊசி செலுத்தப்படுகிறது. கோவிஷ்ல்டு மற்றும் கோவக்க்ஷின் இரண்டு தடுப்பு ஊசி பயன்படுத்தப்படுகிறது.



இதில் வால்பாறை பகுதியில், காலை 7-மணி முதல் மாலை 7-மணிவரை 30-இடங்களில் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை, வெல்லமலை, அக்காமலை எஸ்டேட், அட்டகட்டி, இஞ்சிபாறை, காடம்பாறை, கருமலை, மாணிக்கா, நடுநிலை, சக்தி எஸ்டேட், வால்பாறை பேருந்து நிலையம்,நல்லகாத்து, ஷேன்மொர், வாட்டர் பால்ஸ், ஃபாரஸ்ட், குரங்கு முடி, சேக்கள்முடி, முருகாளி, பழைய வால்பாறை, பண்ணி மேடு, சோலையாறு அனை, உருளிக்கள், வில்லோனி, முடிஷ், ஈடியார், சிறுகுன்றா, பெரிய கல்லாறு, ஆகிய 30-எஸ்டேட் பகுதிகளில் காலை 7-மணி முதல் மாலை 7-மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதில் அனைத்து முகாம்களில் பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி போட வருகிறார்கள் இதில் மக்கள் கூட்டம் இல்லாமல் அனைத்து பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...