தமிழகத்திற்குள் நிபா, ஜிகா போன்ற வைரஸ் எட்டிப் பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கோவை: தமிழக மருத்துவத்துறையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம், பணி நியமனம் செய்யாமல், ஒப்பந்த அடிப்படையிலேயே 30-ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பிராணவாயு இயந்திரம் மற்றும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சி புரம் பகுதி சோதனை சாவடிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வாகனங்களில் வந்தவர்களிடம் ஆர்.டி.பி சி.ஆர் சோதனை மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.,
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் 4 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 200 ஆக குறைந்து இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் குறைய மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவத் துறையில் கடந்த பத்தாண்டுகளாகப் பணி நியமனம், பணி நிரந்தரம் யாருக்கும் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் 30 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தப் பணியிடங்களை வரைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்டை மாநிலமான கேரளாவில் நிபா, ஜிகா போன்ற வைரஸ் தொற்று தமிழகத்தில் வராமலிருக்கத் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கோவை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நடந்த மெகா கொரோனா தடுப்பு முகாமில் 1.5 லட்சம் பேருக்குத் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு சாதனை செய்யப்பட்டது.
இதேபோல் இன்று நடக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் நலவாழ்வு துறை மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், கிராம மக்களிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் தமிழகத்திற்குள் நிபா, ஜிகா போன்ற வைரஸ் எட்டிப் பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.