கோவை ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி..! கண்காணிப்பு கேமரா மீது ஸ்ப்ரே மற்றும் ஏ.டி.எம்.மையத்தில் மிளகாய்ப் பொடி தூவி சென்ற கொள்ளையர்கள்

வெள்ளலூர் ஏ.டி.எம் கொள்ளை முயற்சி குறித்து தெற்கு காவல் உதவி ஆணையாளர் வின்செண்ட் மற்றும் போத்தனுர் போலீசார் தீவிர விசாரணை.



கோவை: சமீபகாலமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணிகள் தீவிரப்படுத்த போதிலும், இந்த திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை.

கோவை வெள்ளலூர் சித்தி விநாயகர் கோவில் அருகில் செயல்பட்டு வரும் கனரா வங்கி அருகிலேயே வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.



இன்று அதிகாலையில், இந்த ஏ.டி.எம்.மையத்தில் உள்ள எந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



ஏ.டி.எம்.மையத்தில் இருந்து வந்த சத்தத்தை தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் வின்செண்ட் மற்றும் போத்தனுர் போலீசார் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர்.



கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்ப்ரே அடித்தும், ஏ.டி.எம். மையத்திற்குள் மிளகாய்ப்பொடி தூவியும் சென்றுள்ளனர். கொள்ளையர்களின் இந்த செயல் காவல்துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க ஏ.டி.எம்.மையம் இருந்த இடத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

கோவையில் சமீபகாலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை முயற்சி அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனபதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...