கோவை வாலாங்குளம் சீரமைப்பு பணிகளை தொழில்நுட்ப வல்லுநர் குழு  நேரில் ஆய்வு.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ. 48  கோடி செலவில் வாலாங்குளத்தில்  நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பணிகளை டெல்லியில் இருந்து வந்த குழுவினர் ஆய்வு.


கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில், குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடி ரூபாய்க்கு வாலாங்குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை வாலாங்குளத்தில்நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இப்பணிகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி ஆணையருடன்இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...