நின்றுகொண்டிருந்த லாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்த கட்டுமான கம்பிகள் சரிந்து, நின்றிருந்த காருக்குள் புகுந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே நின்றுகொண்டிருந்த லாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தகட்டுமான கம்பிகள் சரிந்து, நின்றிருந்தகாருக்குள் பாய்ந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பின் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வீடு கட்டுவதற்கான கம்பிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த கம்பிகள் சரிந்து விழுந்ததில், 10-கும் மேற்பட்ட கம்பிகள் கார் கண்ணாடியை பின்புறமாக உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது.
அந்த காரில் யாரும் இல்லாததால்அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.