கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 48 லாட்டரி சீட்டுகள் மற்றும் 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இன்று அதிகாலை காதி நாயக்கன் பாளையம், ராம்நகர், பெட்டிக் கடையில் வைத்து ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்து 48 கட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துடியலூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், அவரிடமிருந்து 48 லாட்டரி சீட்டுகள் மற்றும் 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.