கோவை கிணத்துக்கடவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு - எம்.எல்.ஏ., தாமோதரன் திறந்து வைத்தார்..!!

கோவை கிணத்துக்கடவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., தாமோதரன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் திறந்து வைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தாமோதரன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செ. தாமோதரன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டு வந்தார்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. செ. தாமோதரன் கலந்து கொண்டு சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



பின்னர், அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக, பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...