கோவை கணபதி பகுதியில் தந்தைப்பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கி சிறப்பாகக் கொண்டாடினர்.
கோவை: பெண்களின் முன்னேற்றம், சுய மரியாதை, தீண்டாமை ஒழிப்பு போன்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திய பகுத்தறிவு பகலவனான பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு அறிவித்ததையடுத்து சமூக நீதிநாளாக கொண்டாடுவதோடு அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர், பொதுமக்கள் என பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கணபதி பகுதி 46 வட்டத்தில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினவிழா சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. இவ்விழா கணபதி பகுதி திமுகவின் பொறுப்புக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் கோபால்சாமி பகுதி பின்புறம் உள்ள திமுக கட்சி அலுவலக வாசலில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, அபபகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதோடு அங்குள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில்கள் வழங்கப்பட்டது.

பெரியாரின் பிறந்த தின நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் முருகேசன், மாணவரணி தர்மா, இளைஞரணி ஜெகதீஸ், இலக்கிய அணி சேரன், காமராஜ், செல்வம், ஈஸ்வரன், ஆறுமுகம், கார்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.