காரமடை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுக - பாஜக வாக்குவாதம்.!!

மேடையில் உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகள் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும். ஆளுங்கட்சி என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எந்த ஒரு அரசுப் பதவியும் இல்லாத திமுகவினர் மேடையில் அமர்ந்திருப்பதற்கு அனைத்து கட்சியினர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுக பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேர்வு நிலை பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்வு செய்தல் குறித்து இரண்டாவது கருத்துக்கேட்பு கூட்டம் காரமடையில் நடைபெற்றது. காரமடை பேரூராட்சியானது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும்.

இப்பேரூராட்சியின் பரப்பளவு 19.827 ச.கி.மீ ஆகும். 18-வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 43,500 ஆகும். கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் பிரசித்திபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இப்பேரூராட்சியில் சுமார் 10000க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் இப்பேரூராட்சி பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஆவார்கள்.

தற்போது இந்த பேரூராட்சியைத் தமிழக அரசு நகராட்சியாகத் தரம் உயர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இதற்கான இரண்டாவது கட்ட பொதுமக்களிடமான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங், சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் வினோத், காரமடை ஒன்றிய தலைவர் மணிமேகலை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் நீண்ட நாட்கள் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் பேசுகையில்:

பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தும் போது கிராமங்கள் கிராமங்களாக இருக்க வேண்டும் நகராட்சியாகத் தரம் உயர்த்தும் போது கிராம ஊராட்சிக்குத் தினசரி ஒரு குடியிருப்புக்கு 55-லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.

இதை நகராட்சியாகத் தரம் உயர்த்தினால் தினசரி 110-லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். நகரத்தை ஒட்டியிருக்கும் கண்ணார்பாளையம், திம்பம்பாளையம், தொட்டிபாளையம், சேரன் நகர், மத்தம்பாளையம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த கிராமங்களை மட்டும் நகராட்சியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மருத ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கராஜ் பேசுகையில்:

கிராம ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் சேர்ப்பதற்கு அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடத்தி மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்திய பின்னர் தீர்மானம் நிறைவேற்றி அதன் பின்புதான் மக்களின் கருத்துக்களை அதிகாரிகள் கேட்க வேண்டும்.

ஆனால் அதிகாரிகள் இதுபோல் செய்வதில்லை. முதலில் காரமடை பேரூராட்சி நகராட்சியாக மாற்றுவதற்கு எந்தெந்த ஊராட்சிகளிலிருந்து எந்தெந்த வார்டுகள் இணைக்கப்பட உள்ளன என்பதை பொதுமக்களுக்கும் ஊராட்சிகளுக்கும் அதிகாரிகள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார் பேசுகையில்:

தேக்கம்பட்டி ஊராட்சியில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் 100-நாள் வேலைத்திட்டத்தைச் சார்ந்தே உள்ளனர். இதனால் இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களை காரமடை நகராட்சியுடன் இணைத்தால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார்.

சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத் குமார் பேசுகையில்:

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 12-வது வார்டுக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் காரமடை பேரூராட்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிக்கும் இடையே உள்ளது. இதனால் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகத்தைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள சேரன் நகர் குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் மற்றும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் மேற்கொள்வதில் நிதிப்பற்றாக்குறை காரணமாகத் தாமதம் ஏற்பட்டு வருகின்றன.

எனவே தற்போது காரமடை பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் வார்டு உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நடத்தி அதில் சேரன் நகர் பகுதியை காரமடை நகராட்சியுடன் இணைக்க அனைத்து வார்டு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பொறுப்புகளிலிருந்தவர்கள் மேடையில் அமர்ந்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேடையில் திமுகவைச் சேர்ந்த காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் அமர்ந்து பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இதனைப் பார்த்த காரமடை மத்திய ஒன்றிய பாஜக தலைவர் விக்னேஸ்வரன் மேடையில் கருத்துக் கேட்பு கூட்டத்தின்போது உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகள் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் ஆளுங்கட்சி என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எந்த ஒரு அரசுப் பதவியும் இல்லாத திமுகவினர் மேடையில் அமர்ந்திருப்பது அனைத்து கட்சியினர் சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகப் பேசினார்.

இதையடுத்து கூட்டத்திலிருந்த திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேடையிலிருந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் திமுகவினர் இடம் பேசிய பின்னர் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...