பேரூராட்சி அலுவலகங்களில் பா.ஜ.கவினர் அதிரடியாகப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டியதால் பரபரப்பு.!!

பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி பேரூராட்சி அலுவலகங்களில் பாஜகவினர் அதிரடியாகப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டினர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி பேரூராட்சி அலுவலகங்களில் பாஜகவினர் அதிரடியாகப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டியதால் பரபரப்பு நிலவியது.

இன்று செப்டம்பர் 17-பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பேரூராட்சி அலுவலகங்களில் பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கக் கோரி செயல் அலுவலர்களிடம் முறையிட்டனர்.

இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலக செயல் அலுவலரை முற்றுகையிட்ட பாஜகவினர். அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்கோரினர்.



இதற்குச் செயல் அலுவலர் உரிய அனுமதி இல்லாமல் பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்க முடியாதெனக் கூறியதால் பாஜகவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பாஜகவினரே அலுவலக வாயிலில் செயல் அலுவலரின் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டினர்.

அதேபோல் கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி பேரூராட்சி அலுவலகங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் மாட்டினர்.



தகவல் அறிந்து அங்கு பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் பாஜகவினர் அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...