கோவையில் தந்தை பெரியாரை அவதூறாக சித்தரித்து வால்போஸ்டர்.. இந்து அமைப்பினர் 2-பேர் கைது.! போஸ்டர் ஒட்டிய தொழிலாளி விடுவிப்பு.!!

100-அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில் தந்தை பெரியாரைப் பற்றி அவதூறாகவும், வளர்த்த மகளைத் திருமணம் செய்து கொண்டவர் என குறிப்பிட்டு பாரத் சேனா அமைப்பின் சார்பாக ஒருவர் வால்போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்.


கோவை: கோவையில் தந்தை பெரியாரை அவதூறாக சித்தரித்து வால்போஸ்டர் ஒட்டிய இந்து அமைப்பினர் 2-பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர்-17 தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல்துறை அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் பணி புரியக்கூடிய அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நேற்று நள்ளிரவு 100 அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில் தந்தை பெரியாரைப் பற்றி அவதூறாகவும், வளர்த்த மகளைத் திருமணம் செய்து கொண்டவர் என குறிப்பிட்டு பாரத் சேனா அமைப்பின் சார்பாக ஒருவர் வால்போஸ்ட் ஒட்டிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன், இன்ஸ்பெக்டர் சாந்தி (பொறுப்பு) ஆகியோர் வால் போஸ்டர் ஒட்டிய ரவிக்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் கோவை மாவட்ட பாரத் சேனா இளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் (31), என்பவரும் பாரத் சேனா பீளமேடு பகுதி உறுப்பினர் தமிழரசன் வயது (30), என்பவரும் வால்போஸ்டர் தன்னிடம் கொடுத்து ஓட்டச் சொன்னதாக அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனைப் பிடித்து வைத்து காந்திபுரம் காட்டூர் காவல்துறை தொடர்ந்து மாலை வரை விசாரணை நடத்தி வந்தனர். வால்போஸ்டர் அடித்து ஒட்டச் சொன்னது உறுதி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியார் குறித்த அவதூறு வால்போஸ்டர் கோவை மாநகரில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...