வால்பாறை நீர் வீழ்ச்சியில் குளிக்குச்சென்ற சுற்றுலாப்பயணி தவறி விழுந்து பரிதாபமாக பலி: சோகத்தில் குடும்பத்தினர்!

வால்பாறைக்கு சுற்றுலா வந்த 39 வயதான நபர், மகிழ்ச்சியாக நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தப்போது தவறி விழுந்தததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொரோனா தொற்றினால் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் தான் கடந்த சில தினங்களாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இங்குள்ள ரம்மியான சூழலை அனுபவிப்பதோடு நீர்வீழ்ச்சிகளிலும் குளித்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இதேப்போன்று தான் இன்று கரூரிலிருந்து ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 20 பேர் வால்பாறைக்கு சுற்றுலாவிற்காக வந்தனர். இங்குள்ள பல்வேறு சுற்றுலா இடங்களைச் சுற்றிப்பார்த்த இவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வாட்டர் பால்ஷ் எஸ்டேட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்துள்ளனர். அப்போது தான் அருகில் இருந்த நீ்ர் வீழ்ச்சி ஒன்றில் 39 வயதான தினேஷ் குமார் என்பவர் குளிக்கச்சென்றுள்ளார். மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டு கீழே இறங்க முயன்ற போது, தினேஷ்குமார் தவறுதலாக மேலிருந்து வழுக்கி 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயத்துடன் இருந்த தினேஷ்குமாரை உறவினர்கள் வட்டார்பால்ஷ் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த தினேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் சுற்றுலாவிற்கு வந்த இடத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...