25-ஆண்டுகளாக வரியை செலுத்தி வருகிறோம்.!! கோவையில் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் 'மசால் லே-அவுட்' பகுதி மக்கள்.!!

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எம்.பி ஆய்வு செய்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுங்கராவை சந்தித்து மனு அளித்தார்.


கோவை: கோவை மசால் லேஅவுட் பகுதியை எம்.பி. நடராஜன் ஆய்வு செய்து அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுங்கராவிடம் மனு அளித்தார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள மசால் லே அவுட் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இதுவரை கோவை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பி.ஆர்.நடராஜன் எம்பியிடம் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வெள்ளியன்று நேரிடையாக அப்பகுதிக்கு நேரிடையாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியினர் எம்.பி.யிடம் கூறுகையில்:-

நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இங்கு உள்ளது. 50- ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். குடிசை மாற்று வாரியத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக வரியை செலுத்தி வருகிறோம். ஆனால் தற்போது வரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

மேலும் பல வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. பிற பகுதிகளில் உள்ள சாலைகளில் நீர் நேராக இந்த பகுதிகளுக்கு வந்தடைகிறது. இந்த சாக்கடை கால்வாயை முறையாக கட்டப்படாததால் பலநேரங்களில் சாக்கடை நீர் வீட்டிற்குள் வருகிறது.

எப்போதும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மையமாக இப்பகுதி உள்ளது. இதனால் நாங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறோம். உடனடியாக சாக்கடை கால்வாய் வசதிகளை செய்துதரப்பட வேண்டும்.

மேலும் இங்கு உள்ள போர்வெல் அடிக்கடி பழுது ஏற்படுவதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது இதனைப் போக்க வேண்டும் என அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனை கேட்டறிந்த பின் பி.ஆர்.நடராஜன் எம்.பி. மக்களிடம் கூறுகையில்,

உங்கள் கோரிக்கை நூறு விழுக்காடு நியாமான கோரிக்கை, ஆகவே இன்றே கோவை மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவதாக்க உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது சிபிஎம் கிழக்கு நகரச் செயலாளர் என்.ஜாகீர், நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் உள்ளிட்ட திரளானோர் உடனிருந்தனர்.



இதனையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து மசால் லேஅவுட் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். உடனடியாக அதிகாரிகளை அப்பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆணையரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...