மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவபடங்களை முகமூடியாக அணிந்தபடி சமூகநீதி கட்சியினர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை: தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி கட்சியினர் 'சமூக நீதி நாள்' உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு இன்று காலை முதல் திமுக உட்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவபடங்களை முகமூடியாக அணிந்தபடி சமூகநீதி கட்சியினர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் வந்த அக்கட்சியினர் சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்து கொண்டனர்.