நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரம் முதலிடம்...!

கோவை மாநகரை பொருத்தவரை சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 9 பேருக்கு எதிராக குற்றங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டிலுள்ள பெருநகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக பதிவானதில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.,), நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக கடந்தாண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உட்பட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டிலுள்ள 19 பெருநகரங்களில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்த தகவல்களை என்.சி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்படி, குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை சென்னை பெற்றுள்ளது.

கோவை மாநகரை பொருத்தவரை, சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 9 பேருக்கு எதிராக குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில், சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 13.4 பேருக்கு எதிராக குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில், கேரளா மாநிலத்தின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது

இதன் வாயிலாக, முதல் மூன்று இடங்களை தென்னிந்தியாவிலுள்ள பெருநகரங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த, 2019ஐ காட்டிலும், 2020ல், பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 2019ல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, 44 ஆயிரத்து, 783 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020ல், 35 ஆயிரத்து, 331 ஆக குறைந்துள்ளது.

கோவையை பொறுத்தவரை, 2019ல், 85 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020ல், 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2019ஐ காட்டிலும் அதிகம் என்றாலும், ஒட்டுமொத்த பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளன.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...