தமிழக மாணவர்களின் உயிரைப்பறிக்கும் நீட் தேர்விற்கு எதிரான ஆவணத்தில் தமிழகத்தின் புதிய ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்ற கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவைப் பறிப்பதோடு, அவர்களைத் தற்கொலைக்கும் தூண்டுகிறது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு.
மேலும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் கூட்டாச்சி தத்துவத்தை சிதைத்து, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் இந்த நீட் தேர்விற்கு எதிராக முதலில் அரியலூர் அனிதா உயிரிழ்ந்தார். இதனையடுத்து தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாணவர்கள் இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள், தற்பொழுது கூட செங்கல்பட்டு அனுஷ்யா, வேலூரில் சௌந்தர்யா, சேலத்தில் தனுஷ், அரியலூரில் கனிமொழி, போன்ற மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழிலல் தான் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இன்று கோவை ரயில் நிலையம் முன்பாக அனைத்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுடன் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களும் எழுப்பபட்டது.
இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக இந்த ஆண்டும் 3 மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு விலக்குஅளித்து சட்டமன்றத்திலும் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார். ஆனால் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் போல் இல்லாமல் நீட் தேர்விற்கு எதிரான ஆவணத்தில் புதிதாக வந்துள்ள ஆளுநர் ரவி உடனடியாக கையெழுத்திட வேண்டும். இல்லாவிடில் மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதோடு நீட் தேர்விற்கு எதிராக உயிரிழ்ந்த மாணவர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் மருத்துவக்கனவோடு உயிரிழந்த மாணவர்களின் உயிர் இழப்பைப்பற்றி ஏளனமாய் பேசும, மாவட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எச். ராஜா ஆகியோர் இனி எந்த கல்வி நிலையங்களிலும் கால்வைக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.