திருப்பூரில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை, அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்துக்குதறிய சிசிடிவி காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு 6 வயதில் பிரகதீஸ் என்ற மகன் உள்ளார். இச்சிறுவன் வழக்கம் போல நேற்று மாலை வீட்டு வாசல் முன்பாக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் சுற்றித்திரியும் ஐந்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சிறுவன் பிரகதீஸை கடித்துக்குதறியவாறே தூக்கிச்சென்றது. இதனையடுத்து உடன் விளையாடிய சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டாரர்கள் தெருநாய்களை அடித்து துரத்தினர்.
பின்னர் பிரகதீஸை மீட்ட பெற்றோர்கள் திருப்பூர் அரசு மாவட்டமருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர். தற்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதில், ஏற்கனவே மாநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளதால் சிறுவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோரை கடிக்க முயல்கிறது. எனவே இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். ஆகவே இப்பொழுதாவது தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.