மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கையை அகற்றுவதற்குப் போராடிய தலைவருக்கு மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
கோவை: தந்தை பெரியார் 143 பிறந்த தினமான சமூக நீதி நாளை முன்னிட்டு கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் அமைய பெற்ற தந்தை பெரியார் சிலைக்கு கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், கோவையின் சார்பாக கோவை நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை மாவட்ட ஆட்சியாளர் சமீரன் சார்பாக, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு புத்தகங்களை கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே. ஜெயஸ்ரீயிடம் வழங்கப்பட்டது.
பின்னர், கோட்டயம் மாவட்ட ஆட்சியாளர் பி.கே. ஜெயஸ்ரீ பத்திரிகையாளரிடம் தெரிவித்ததாவது,
சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை, பெண் உரிமை, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை பெரியார் அவர்கள் உருவாக்கினார். அதுதான் கடந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது, அதுவே எதிர்காலத்திற்கும் பாதை அமைக்கும் என்றார்.
இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூகநீதி நாளாக அறிவித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இதனை சிறப்பு செய்யும் விதமாக கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் பெரியார் நினைவிடத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்.
மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கையை அகற்றுவதற்கு போராடிய தலைவருக்கு மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக கோட்டயம் மாவட்டம் ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் தொடர்பு துறை அலுவலர் ஆ.செந்தில் அண்ணா பங்கேற்றார்.