மாநகராட்சியில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், அனைத்து அலுவலார்களும், பணியாளார்களும் ஏற்கும் நிகழ்ச்சி இன்று (17.09.2021) நடைபெற்றது.
கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்றப்பட்டது,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்!!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளாா் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் கு.விமல்ராஜ், மற்றும் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலா்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.