சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி அளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கோவை: வால்பாறையில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதி நாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழாவை சமூக நீதி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் விழாவில் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமை தாங்கினார். விழாவில் ஈ.கா. பொன்னுசாமி தந்தை பெரியாரைப் பற்றி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மையும் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி அளிக்கிறேன் என இன்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி வர்த்தக அணி இணைச் செயலாளர் JBR பாஸ்கர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், வழக்கறிஞர் வினோத்குமார் ஈகா பொன்னுசாமி, கூட்டணி கட்சியினர் கம்யூனிஸ்ட் பெரியசாமி, தனபாண்டியன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.