பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 11 மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு..!

ஆழியாறு ஆற்றங்கரை கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், ஆற்றங்கரையோரம் ஆடு, மாடு மேய்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் நேற்று நள்ளிரவில் 11 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள அணைகளுக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை கடந்த 15ம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 11 மதகுகள் வழியாக உபரி நீரை திறந்து விட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு அப்பர் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,400 கன அடியாக அதிகரித்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நேற்று நள்ளிரவு 11.10 மணி முதல் அதிகாலை 1.40 வரை 11 மதகுகள் வழியாக, அணையிலிருந்து வினாடிக்கு 1,815 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.



இன்று அதிகாலை நிலவரப்படி ஆழியாறு அணையின் நீர்மட்டம் 119.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில், குறிப்பிட்ட கால இடைவெளியில் உபரிநீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உபரி நீர் திறந்து விடப்படுவதால், ஆழியாறு ஆற்றங்கரை ஒட்டியுள்ள கரையோர கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், ஆற்றங்கரையோரம் ஆடு, மாடு மேய்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...