உலக வங்கி நிதி உதவியுடன்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசுகளால்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌ STRIVE.!!!

STRIVE திட்டத்தின்‌ கீழ்‌ கோவை CODISSIA-வின்‌ கீழ்‌ இயங்கும்‌ MSME-நிறுவனங்களில்‌ பின்வரும்‌ தொழிற்பிரிவுகளில்‌ தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


கோவை: உலக வங்கி நிதி உதவியுடன்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசுகளால்‌ நடைமுறைப் படுத்தப்படும்.‌ STRIVE திட்டத்தின்‌ கீழ்‌ கோவை CODISSIA -வின்‌ கீழ்‌ இயங்கும்‌ MSME -நிறுவனங்களில்‌ பின்வரும்‌ தொழிற்பிரிவுகளில்‌ தொழிற்‌ பழகுநர்‌ பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

1.Machinist

2.Fitter

3.CNC Programmer cum Operator

இதற்கான கல்வித்‌ தகுதி 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்‌. 16-வயதிற்கு மேற்பட்ட தகுதியான நபர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. மூன்று முதல்‌ ஆறு மாதங்கள்‌ அடிப்படை பயிற்சி மற்றும்‌ அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளில்‌ ஓராண்டு முதல்‌ இரண்டாண்டுகள்‌ வரை தொழிற்பழகுநர்‌ பயிற்சி வழங்கப்படும்‌.

பயிற்சி நிறைவு செய்த பின்‌ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌. இச்சான்றிதழினைக்‌ கொண்டு அயல்நாட்டுப்‌ பணிகளுக்கு செல்ல முடியும்‌.

இது தொடர்பாக எதிர்வரும்‌ 18.09.2021 மற்றும்‌ 26.09.2021 அன்று காலை 10-முதல்‌ மாலை 5 வரை அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலையம்‌, கோவையில்‌ நேர்காணல்‌ நடைபெறவுள்ளது. விருப்பம்‌ உள்ளவர்கள்‌ ஆதார்‌ அட்டை, கல்வி சான்றிதழ்கள்‌, சாதிச்சான்றிதழ்‌ மற்றும்‌ பாஸ்போர்ட்‌ புகைப்படம்‌ (3 எண்கள்‌) ஆகியவற்றுடன்‌ நேரில்‌ பங்குக்‌ கொள்ளலாம்‌.

பயிற்சியின்‌ போது உதவித்தொகை வழங்கப்படும்‌. தனியார்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பு அமைத்து தர ஆவண செய்யப்படும்‌.

எனவே, இந்த நல்வாய்ப்பினை 10 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும்‌, 11ம்‌ வகுப்பு, 12 ஆம்‌ வகுப்பு, பட்டய மற்றும்‌ பட்டப்படிப்புகளில்‌ இடைநின்றவர்களும்‌ பயன்படுத்தி பயன்பெறலாம்‌ எனத்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌ விபரங்களுக்கு உதவி இயக்குநர்‌, மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகம்‌, அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய வளாகம்‌ கோவை அவர்களை 0422:2642044, 8825603119 & 8122047178 ஆகிய தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...