கிணத்துக்கடவு அருகே மதுப்போதையில் தண்ணீர் என நினைத்துப் பாட்டிலில் ஊற்றி வைத்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவரடிப்பாளையம் பகுதியில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்று உள்ளது.
இங்கு திருப்பூர்மாவட்டம் கண்ணாடிபுத்தூரைச்சேர்ந்த 29 வயதான ராஜேஷ்குமார் கூலித்தொழிலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 ஆம் இரவு மதுப்போதையில் இருந்தப்போது, தண்ணீர் தாகம் எடுத்த நிலையில், தண்ணீர் பாட்டிலில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக்குடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்க நிலையில் இருந்த ராஜேஷ்குமாரை, கோழிப்பண்ணை உரிமையாளர் நாராயணசாமி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த ராஜேஷ்குமாரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.