கோவை உள்பட கொங்கு மாவட்டங்களின் தொழில்துறை ஏற்றுமதிப் பொருட்கள் சென்னை, பெங்களூர், கொச்சின் விமான நிலையங்களில் டன் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம்.!!

கடல் போக்குவரத்தைத் தொடர்ந்து விமான போக்குவரத்திலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுவதால் ஏற்றுமதி தொழிலுக்கு பெரும் பின்னடைவு.



கோவை: கோவை உள்பட கொங்கு மாவட்டங்களின் தொழில்துறை ஏற்றுமதிப் பொருட்கள் சென்னை, பெங்களூர், கொச்சின் விமான நிலையங்களில் டன் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கன்டெய்னர்கள் பற்றாக்குறை காரணமாகக் கடல் வழி போக்குவரத்து ஏற்றுமதியாளர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கோவை உள்பட கொங்கு மாவட்டங்களில் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து தயாரிக்கப்படும் வால்வு, மெஷினரி, காஸ்டிங், உள்ளிட்ட பொருட்கள் சென்னை, பெங்களூரு, கொச்சின் உள்ள விமான நிலையங்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பல டன் எடையிலான பொருட்கள் பல நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஏற்றுமதி தொழிலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்(IIF), கோவை கிளை தலைவர், பால்ராஜ் கூறியதாவது:

கோவை மாவட்டத்திலிருந்து வால்வு, மெஷினரி, காஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையிலிருந்து நேரடியாகப் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கோவை சுற்றுப்புற மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் கேட்வே ஏர்போர்ட்ஸ்(Gateway Airports) என்று சொல்லக்கூடிய சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு நேரடியாகவோ அல்லது பாண்டட் ட்ரக் சர்வீஸ்(Bonded Truck Service)உதவியுடன் சாலை வழியாக விமான நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் பொருட்கள் உரிய நேரத்தில் கேட்வே விமான நிலையங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. பொருட்கள் ஏற்றுமதி செய்வது மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை துவக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த சர்வீஸ் துவக்கப்பட்டால் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களின் சாம்பிள் எளிதில் பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும்.

துபாயிலிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு நேரடி விமான சர்வீஸ் இருப்பதே இதற்குக் காரணம். தற்போது இந்த சாம்பிள் சென்னை,பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்படுவதால் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. கோவை - துபாய் இடையே நேரடி விமானச் சேவை மிக, மிக அவசியமானதாகும்.

ஏற்கனவே கண்டெய்னர்கள் தட்டுப்பாடு காரணமாகக் கடல் வழியாக அனுப்பப்படும் ஏற்றுமதி கார்கோ போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் மூலம் தொழில்துறை பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவது தொழித்துறையினர் அனைவருக்கும் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை, இன்டர் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூசன்ஸ்(Inter Global Logistics solutions), முதன்மை செயலாக்க அதிகாரி(Chief Operating Officer), திலீப் ஆபிரகாம் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து கடல் வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் பல்வேறு நாடுகளுக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எண்ணிக்கைக்கேற்ப கடல் வழியாகவும் ஆகாய மார்க்கமாகக் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் பொருட்களை எடுத்து செல்ல போக்குவரத்து வசதி அதிகரிக்கப்படவில்லை.

கோவை சுற்றுப்புற மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் கேட்வே ஏர்போர்ட்ஸ்(Gateway Airports) என்று சொல்லக்கூடிய சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விமான நிலையங்களில் அந்த விமான நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அதிக அளவில் புக்கிங் செய்யப்படுவதால் அந்த விமான நிலையங்களில் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து கொண்டு செல்லப்படும் ஏற்றுமதி கார்கோ உடனடியாக பிராசஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக டன் கணக்கில் எடை கொண்ட பல்வேறு வகையான தொழில்துறை உற்பத்தி பொருட்கள் சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் குறித்த நேரத்தில் இந்த பொருட்கள் அனைத்தும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட விமான நிலையங்களில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏற்றுமதிக்காகக் கொண்டு செல்லப்படும் தொழில்துறை உற்பத்தி பொருட்கள் மிகவும் காலதாமதமாகக் கையாளப்படுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு தற்போதைக்கு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

சர்வதேச விமான போக்குவரத்து துவங்க எதிர்வரும் நாட்களில் மத்திய அரசு அனுமதி அளித்தாலும் உடனடியாக அனைத்து விமானங்களும் பழையபடி சர்வீஸ் துவக்க முன் வர மாட்டார்கள். இதற்குக் காரணம், பயணிகள் மத்தியில் நிலவும் கொரோனா பரவல் குறித்த அச்சம் மற்றும் விமான கட்டணம் அதிகம் இருப்பது என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் ஆகும்.

எனவே ஏற்றுமதி தொழில் தற்போது சந்தித்து வரும் பிரச்சனை ஜனவரி 2022 வரை தொடரும். அதற்குப் பிறகு கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தொழில்துறை பொருட்கள் காலதாமதமின்றி குறித்த நேரத்தில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...