கோவை பெரியார் படிப்பகத்தில் நாளை தந்தைப்பெரியாரின் 143 வது பிறந்த தினம் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்!

தந்தைப்பெரியாரின் 143 வது பிறந்தத் தினத்தை முன்னிட்டு கோவை காந்திப்புரத்தில் உள்ள பெரியார் சிலை முன்னதாக மேடை அமைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகிறது.


கோவை: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், பெண் கல்வி, பெண் சுதந்திரம், சுய மரியாதை கிடைப்பதற்கு என பல்வேறு எழுச்சிக்களை ஏற்படுத்திய தந்தைப்பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.

இந்தாண்டு இவரின் 143 வது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசு தந்தைப்பெரியாரின் பிறந்தத் தினத்தை சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இந்தியா முழுவதும் சமூக நிதி பரவ பெரியார் போட்ட அடித்தளம் தான் காரணம். எனவே அவருக்கு நன்றியைத்தெரிவிக்கும் விதமாக பெரியாரின் பிறந்த தினம் சமூக நீதி நாளாகக்கொண்டாடப்படும் என தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் தான், கோவை தந்தை பெரியார் திராவிடக் கழக அலுவலகம் முன்பு உள்ள பெரியார் திடலில் பிறந்த நாள் விழாவை சமூக நீதிநாளாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.



ஒவ்வொரு ஆண்டும் தந்தைப்பெரியாரின் பிறந்த தின நாளில், பல்வேறு அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.



ஆனால் இந்த முறை பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்டாடப்படவுள்ளதால், பெரியார் சிலை முன்னதாக அமைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...