கோவை மாநகராட்சி மத்திய மண்டலப்பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா, நியாய விலைக்கடை கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல வார்டுகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காமாட்சி நகர், நாராயணசாமி வீதியில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் மாநகராட்சி பூங்கா, புதிதாக நியாயவிலைக்கடை கட்டிடம் கட்டப்படுவருவதை பார்வையிட்டார். பின்னர் இப்பணிகளையெல்லாம் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதனைத்தொடர்ந்து, சங்கனூர் மின்மயானத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி ஆணையாளா் பார்வதி, உதவி செயற்பொறியாளா் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.