கர்ப்பிணிகள் முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்; திருப்பூர் சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ செல்வராஜ் வேண்டுகோள்!

கொரோனா காலம் என்பதால் கர்ப்பிணிகள் முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு திருப்பூர் சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் சமூக நலம், ஒருங்கிணைந்தக் குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தனியார் மண்டபத்தில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில், கலந்துக்கொண்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தாம்பூலத்துடன், பூ, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 5 வகையான சாதத்துடன் உணவு வழங்கப்பட்டது.

இதனையடுத்து சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கர்ப்பிணிகள் தங்களையும், கருவில் வளரும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் கவனித்துக் கொள்ளவதற்கு முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதோடு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...