வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

காட்டு யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் துவங்கி வருகிறது. காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் பொழுது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி வழியாகச் செல்கிறது.

யானைகள் செல்லும் வழியில் மளிகை கடை, சத்துணவு மையம், நியாய விலை கடை, மக்கள் குடியிருப்பு வீடுகள் போன்றவைகள் உள்ளதால் அவற்றை உடைத்துச் சேதப்படுத்தி உள்ளிருக்கும் அரிசி, பருப்பு போன்றவைகளை தின்று சேதப்படுத்தி வருகிறது.

இதனிடையே, வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ராஜா மற்றும் அசாம் மாநில தொழிலாளர்கள் குடியிருக்க 6 வீடுகள் வழங்கப்பட்டு அதில் 24 பேர்கள் குடியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள், வீட்டைச் சுற்றி நின்று வீட்டின் சுவரை இடித்துச் சேதப்படுத்தியது. வீட்டில் இருந்த அரசத் அலி, பிலால் அதுசுளாம் என்பவர்கள் குழந்தைகளுடன் உயிருக்குப் போராடினர்.

பின்னர், வீட்டின் பின்புறம் இரவில் தேயிலை தோட்டம் வழியாக அருகில் இருக்கும் வீட்டுக்கு பாதுகாப்பாக சென்றனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.



வீட்டின் முன் நின்று தோட்டத்தில் இருந்த பலா மரங்களை உடைத்து தின்றும் வீட்டின் சுவரை இடித்து உள்ளிருந்த பொருட்களை டிவி, கட்டில், பீரோ போன்ற பொருட்களைச் சேதப்படுத்தியது.

இந்த நிலையில், காட்டு யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...