கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தில் கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை வேலாண்டிபாளையம், மகேஸ்வரி காலனி, மகாத்மா காந்தி வீதி, பகுதியில் வசிப்பவர் ஆனந்தகுமார் (50), ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு செல்வி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனந்தகுமார் இரவு நேரத்தில் வீட்டிற்கு வரும்போது குடித்து விட்டு வருவது வழக்கம். வந்ததும் செல்போன் மூலமாக தொடர்ந்து பல்வேறு பெண்களுடன் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார் ஒரு பெண்ணுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை செல்வி தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு முற்றியது.
அப்பொழுது, அவர் தனது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி செல்வியை கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை இடையர்பாளையத்தில் உள்ள கிருபா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே செல்வி இறந்துவிட்டதாக கூறினர்.
இதைக் கேள்விப்பட்ட துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் பாண்டியம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, கணவர் ஆனந்த குமார் தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.