வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூமாட்டி செட்டில்மென்ட் மலைவாழ் மக்களுக்கு குடிநீர், சூரிய மின்விளக்கு போன்ற ரூ.4 லட்சம் மதிப்பிலானப் பொருள்களை சேலம் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பகுதிதான் உலாந்தி. மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும், உலாந்தி வனச்சரகத்திற்கும் இடைப்பட்ட இந்த அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 33 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக அடந்த வனப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்திச் செய்யவதாக சேலம் ரோட்டரி கிளப் சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம் இயக்குனர் ராம சுப்பிரமணியம் மற்றும் துணை இயக்குனர் கணேசன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட கூமாட்டி செட்டில்மெண்ட் மலைவாழ் பகுதி மக்களுக்கு சூரிய மின் தெரு விளக்கு, சூரிய மின்விளக்கு வீடுகளுக்கு கம்பளி மற்றும் பாய், மழைக் கோட்டுகள், 3000 லிட்டர் வாட்டர் டேங்க், 100 மீட்டர் பிவிசி பைப் சமையல் பாத்திரங்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக காய்கறி விதைகள் என ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டது.

இதனைப்பெற்றுக்கொண்ட மக்கள் மிகுந்த உற்சாகத்தில் நன்றிகளை தெரிவித்தனர். மேலும் இந்த விழாவில் மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.