மாற்றுத்திறனாளிகள் சென்று எளிதாக வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் இல்லாத வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம் ஏற்படுத்தப்படும் எனவும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட ஊராட்சி இடைதேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் உள்பட 77,790 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்ட ஊராட்சி இடைதேர்தலில் 37,559 ஆண்கள், 40,229 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 77 ஆயிரத்து 790 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 670 பேர் அதிகமாக உள்ளனர். இதற்காக 131 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வாக்குப்பதிவுக்கு மட்டும் 100 வாக்குச்சாவடிகள் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், மட்டும் 28 ஆயிரத்து 477 ஆண் வாக்காளர்கள், 30 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் என 59 ஆயிரத்து 201 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதையடுத்து, ஆனைமலை திவான்சாபுதூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி தேர்தலில் 4 ஆயிரத்து 140 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 415 பெண் வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 ஆயிரத்து 556 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். பிற இடங்களில் மிக குறைந்த அளவிலான வாக்காளர்களே வாக்களிக்கின்றனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள் சென்று எளிதாக வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் இல்லாத வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம் ஏற்படுத்தப்படும். மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.