கோவையில் கொரோனா கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காத KG செவிலியர் கல்லூரிக்கு அபராதம் விதிப்பு..!

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவிகளை கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கொரோனா கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காததால் KG செவிலியர் கல்லூரிக்கு அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 46 மாணவிகளுக்கு நேற்று கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களை கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜாக்கிரதையாக கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்ட தனியார் (KG) செவிலியர் கல்லூரிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...