வால்பாறை டவுன் பகுதியில் அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகள்..! வன பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை..!!

சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.


கோவை: வால்பாறை டவுன் பகுதியில் அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை வன பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரிய வகையான சிங்கவால் குரங்குகள் சுமார் 500க்கும் மேற்பட்டவை உள்ளன. இதை வனத்துறையினர் தனியார் தன்னார்வ நிறுவனங்கள் பாதுகாத்து வருகின்றனர்.

வால்பாறையில் புது தோட்டம் என்ற பகுதியில் வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் சிங்க வால் குரங்குகளை பார்த்து ரசித்து வருகின்றனர். சிங்கவால் குரங்குகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் சுற்றித் திரிந்தன.



இந்த நிலையில், தற்போது சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் வால்பாறை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளில் உள்ள பூந்தொட்டிகளைச் சேதப்படுத்தி, வீட்டில் உள்ள வாழை மரங்கள், மா மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டு சுற்றித் திரிகின்றன.

அதேபோல, வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வாழை பழக்கடைகள், மளிகைக் கடைகள், பால் கடைகள் போன்றவற்றில் சிங்கவால் குரங்குகள் தொந்தரவு செய்தன. சாலையில் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

மேலும், குரங்குகள் டவுன் பகுதியில் வருவதால் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...