கிணத்துக்கடவு பகுதியில் பல நாள்களாக ஏற்பட்டுவந்த பாதைப்பிரச்சனை முற்றிய நிலையில் விவசாயி தாக்கப்பட்டார். இதனையடுத்து விவசாயி கொடுத்த புகாரின் பேரின் தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகவதிபாளையம் பகுதியிலுள்ள இளங்கோவன் வீதியைச் சேர்ந்தவர் 76 வயதான விவசாயி தங்கவேல்.
இவர் அவரது தோட்டத்திற்கு செல்வதற்கு எப்போதுமே வண்டிப்பாதை ஒன்றைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இவ்வழியாக செல்லும் போது விவசாயி தங்கவேலுக்கும், அதேப்பகுதியைச்சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் அடிக்கடி பாதைப்பிரச்சனை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சம்பவம் நடந்த நாளன்று, வழக்கம் போல விவசாயி, அவருடைய இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் தான் இந்த வழிப்பாதையை இனி மேல் பயன்படுத்தக்கூடாது என சின்னத்துரை கூறியுள்ளார். ஆனால் விவசாயி தங்கவேல், தோட்டத்திற்குச் செல்வதற்கு இது தான் பாதை, அப்படி இருக்கையில் ஏன் செல்லக்கூடாது? என கேட்ட போது தான் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. தீடிரென வாக்குவாதம் முற்றிய நிலையில் சின்னத்துரை என்பவர் விவசாயி தங்கவேலை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த விவசாயி தங்கவேல், பொள்ளாட்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். முன்னதாக இதுக்குறித்து விவசாயி, கிணத்துக்கடவு போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.