கோவையில் சரவணம்பட்டி பகுதியில் சுகாதாரமான முறையில் உணவுகளை வழங்கிவரும் நடைபாதை கடைக்காரர்களுக்கு உணவுத்தர சான்றிதழான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ யை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வழங்கினார்.
கோவை: மக்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்குவது என்பது அனைவரின் முக்கியப்பணியாகும்.
அதிலும் நடைப்பாதைக் கடைகள் வைத்து நடத்துபவர்கள் தரமான உணவுப்பொருள்களைத்தான் மக்களுக்கு வழங்குகிறார்கள் என்பதற்கான உணவுச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை நடைப்பாதை கடைக்கார்களின் தரத்தினை அறிந்துக்கொள்வதற்காக கோவை மாவட்ட உணவு மாவட்ட நியமன அலுவலரின் தலைமையில் மேற்பார்வையிடுவதற்கு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அண்மையில் நடைப்பாதைக்கடைகளைத் தணிக்கை செய்தனர். அதன் அடிப்படையில் நடைப்பாதைக் கடைக்காரர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று சரவணம்பட்டி நடைபாதை உணவு வணிகர் மற்றும் சிறு குறு உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் கீழ் (எப்.எஸ்.எஸ்.ஏ. ஐ) சுத்தமான உணவு மையம் தரச்சான்றிதழை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். இந்நிகழ்வில் கோவை மாவட்டஉணவு பாதுகாப்பு துறை நியமனஅலுவலர் தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சண்முகம், கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இவ்விழாவில் பேசிய ஆட்சியர், நடைப்பாதை உணவு கடைக்காரர்களுக்கு தரச்சான்றிதழ் பெறுவதற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் சரவணம்பட்டி பகுதியில் அடையாளம் காணப்பட்ட 112 கடைகளில் 40 கடைகள் தணிக்கையின் போது இருந்தததாக தெரிவித்தார். மேலும் இதில் தணிக்கையில் சரிபார்க்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் உணவு வழிகாட்டி ஆவணத்தின் படி உணவு தயாரித்தல், சமைத்தல், சேமித்தல், பரிமாறுதல், பணியாளர் தன் சுத்தம், நீரின் தரம் போன்ற நடைமுறைகள் போன்றவை சரிப்பார்க்கப்பட்டது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதியாக சரவணம்பட்டி பகுதியில் நடைபாதை உணவு வணிகர் மற்றும் சிறு குறு உணவு வணிகர்களுக்கு 150-க்கு 126 மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஆட்சியர் கூறினார்.